Mini Hybrid Solar Dryer

உணவுப்பொருட்களை பதப்படுத்த உதவும்                                         

சிறியகலப்பு சூரிய உலர்த்தி (MINI Hybrid SOLAR DRYER) தொழில்நுட்பம்
உணவுப்பொருட்களை பதப்படுத்த உதவும்                                         
சிறிய கலப்பு சூரிய உலர்த்தி (MINI SOLAR DRYER) தொழில்நுட்பம்

உணவு மற்றும் விவசாய பொருட்கள் அதிகமாக வீணாகக்கூடிய இன்றைய காலக்கட்டத்தில் அதை நீண்ட நாட்கள் கெடாமல் பதப்படுத்தி பாதுகாத்து வைப்பது மிகவும் அவசியமானது.உணவுப் மற்றும் விவசாய பொருட்களை நீண்ட நாட்கள் கெடாமல் பாதுகாக்க நாம் பல பதப்படுத்துதல் முறைகளை கையாள்கிறோம். அதில் குறிப்பாக குளிர்பதனம் மூலம் கெடாமல் பாதுகாப்பது மற்றும் வெயிலில் மூலம் பதப்படுத்தி பாதுகாப்பது. இதில் குளிர்பதன முறையை விட வெயிலில் பதப்படுத்துவதுதான் உணவுப் மற்றும் விவசாய பொருட்களை நீண்ட நாட்கள் கெடாமல் பாதுகாக்கலாம். உதாரணமாக நாம் இன்றும் செய்யும் மாங்காய் வற்றல், கத்திரிக்காய் வற்றல்,சுண்டக்காய் வற்றல், மிளகாய் வற்றல், சில ஊறுகாய் வகைகள், கருவாடு போன்றவை வெயிலின் மூலம் பதபடுத்தி பாதுகாக்கும் முறைகளாகும். இதேபோல் பல உணவுப் மற்றும் விவசாய பொருட்களை வெயிலின் வெப்பத்தின் மூலம் பதப்படுத்தி பாதுகாக்கப்படுகின்றன. இது ஒரு வகையான மதிப்பு கூட்டுதல் முறையாகும்.

வெட்ட வெளியில் வெயிலில் காயவைப்பதால் ஏற்படும் தீமைகள்:

வெட்ட வெளியில் வெயிலில் காயவைக்கும் போது பலவித பிரச்சனைகள் உள்ளன. காற்றிலிருந்து வரும் மாசு, தூசி போன்றவை உணவுப் பொருட்களில் படிதல், பூச்சிகளின் தொல்லை, பூஞ்சைகள் தாக்கக்கூடிய வாய்ப்பு, அதிகமான ஈரப்பதம், பறவைகளின் மூலம் ஏற்படும் பொருட்களின் இழப்பு, பறவைகளின் எச்சம், இறக்கைகள் பொருட்களில் படித்தல், வெப்பத்தின் அளவு அடிக்கடி மாறுபடுவதால் உணவுப் பொருட்களின் தரம் மற்றும் சுவை குறைதல், திடீர் மழையின் மூலம் பொருட்களில் சேதாரம் ஏற்படுதல் போன்றவை வெட்ட வெளியில் பதப்படுத்தலில் உள்ள பிரச்சனைகள் ஆகும்.

சூரிய உலர்த்தின் செயல்முறைகள்:

வெயிலின் வெப்பத்தில் உணவுப் பொருட்களை பதப்படுத்த இப்போது சூரிய உலர்த்தி என்ற புதிய தொழில்நுட்பம் பயன்படுத்தப்படுகிறது. சூரிய உலர்த்தி தொழில்நுட்பத்தில் சூரிய வெப்பத்தை உள்வாங்க Solar Panel பயன்படுத்தப்படுகிறது. சூரிய உலர்த்தி-ல் வெப்பத்தை தக்க வைத்துக்கொள்ள ஒரு கூடாரம் அமைப்பு பயன்படுத்தப்படுகிறது. இந்த கூடாரம் Poly Carbonate மூலம் செய்யப்பட்டுள்ளது. கூடாரத்தின் அளவு நம் தேவைக்கு ஏற்ற அளவுகளில் வாங்கி பயன்படுத்திக்கொள்ளலாம். Solar Panel-களின் மூலம் சூரிய வெப்பம் உட்கிரகிக்கப்பட்டு இந்த கூடாரத்தில் செலுத்தப்படுகிறது. சூரிய வெப்பத்தின் அளவு சுமார் 50 டிகிரியில் இருக்குமாரு இதில் அமைக்கப்பட்டுள்ளது. வெப்பத்தின் அளவை தீர்மானிக்க ஒரு Sensor இதில் பொருத்தப்பட்டிருக்கும். வெப்பத்தின் அளவு 50 டிகிரிக்கு கீழே குறைந்தால் சூரிய உலர்த்தி-லில் பொருத்தப்பட்டிருக்கும் சூரியன் மூலம் அல்லது Heater மூலம் வெப்பம் அதிகரிக்கப்படுகிறது. இதேபோல் வெப்பத்தின் அளவு 50 டிகிரிக்கு மேலே அதிகரித்தால் சூரிய உலர்த்தி-யில் பொருத்தப்பட்டிருக்கும் COOLER மூலம் குளிர் காற்று செலுத்தப்படுகிறது. இந்த செயல் முறைகள் தானாக நடைபெருமாறு தானியங்கி (Automation) தொழில்நுட்பம் சூரிய உலர்த்தி-யில் பயன்படுத்தப்படுகிறது.

சூரிய உலர்த்தி-யில் பதப்படுத்தும் பொருட்களை வைப்பதற்கு பல தட்டு-க்கள் பயன்படுத்தப்படுகிறது. கூடாரத்தின் உள் வெப்பம் அதிகமாக இருப்பதால் பதபடுத்தும் பொருட்களை கூடாரத்தில் நின்று பொருட்களை வைப்பது சிரமாக இருக்கும் என்ற காரணத்தினால் இந்த தட்டு க்கள் பயன்படுத்தப்படுகிறது. சூரிய உலர்த்தி அமைக்கப்பட்டிருக்கும் தரையின் நிறம் கருப்பு நிறத்தில் அமைக்கப்பட்டிருக்க வேண்டும்.

சூரிய உலர்த்தின் நன்மைகள்:

  • சீரான வெப்பநிலை பாரமரிக்கப்படுவதால் பதப்படுத்தும் பொருட்களின் சுவை அதிகரிக்கிறது.
  • பதப்படுத்தும் பொருட்களின் தரம் அதிகரிக்கிறது,
  • நிறம் ஒரே மாதிரியாக காணப்படுகிறது,
  • பறவைகளின் மூலம் எவ்வித பிரச்சனைகளும் ஏற்படாது,
  • பூஞ்சைகளின் தாக்குதல் இருக்காது,
  • பூச்சிகளின் தொல்லை இருக்காது,
  • காற்றின் மாசுக்கள் பொருட்களில் படியாது,
  • திடீர் மழையினால் எவ்வித பொருட்கள் சேதாரமும் ஏற்படாது,

SOLAR DRAYER-ல் மூலம் பதபடுத்தக்கூடிய பொருட்கள்
பல்வேறுப்பட்ட பொருட்களை சூரிய உலர்த்தி -யில் பதப்படுத்தலாம். இப்போது வெங்காயம் (Onions), தக்காளி (Tomatoes), மாங்காய் (Mango), உருளைகிழங்கு (Potato), நெல்லிக்காய்(Amla), பாகற்காய், கொத்தவரங்காய், பலவித மூலிகை பொருட்கள் (Ayurvedic Herbs) குறிப்பாக ஸ்பையிரிலூன (Spirulina), காளான் (Mushrooms) , கருவாடு (Drying Fish), இறால் (Prawn), நண்டு ( Shrimps) மேலும் பல பொருட்கள் சூரிய உலர்த்தி -ல் காயவைத்து பதப்படுத்தப்படுகின்றன.

சூரிய உலர்த்தி -ல் காயவைத்து பதப்படுத்தப்படுத்திய பொருட்களின் தரம் மற்றும் சுவை அதிகமாக இருப்பதால் சந்தையில் அதன் தேவையும் விலையும் அதிகமாக இருக்கிறது

தயாரிப்பு பற்றி:
ஐ.டிகோர் சொல்யூஷன்ஸ் மினி சோலார் ட்ரையர், பாலிகார்பனேட்டுடன் பயனுள்ள உலர்த்துதல் என்பது ஒரு மூடிய அமைப்பாகும், இது இயற்கையான சூரியக் கதிர்வீச்சைப் பிடிக்கிறது மற்றும் உலர்த்தும் திறனை மேம்படுத்துவதற்காக மினி சோல்சர் உலர்த்தியின் உள்ளே காப்பிடப்படுகிறது.அதிக வெப்பநிலை

காற்றின் இயக்கம் மற்றும் உள்ளே ஈரப்பதம் குறைவாக இருப்பதால் வேகமாக உலர்த்தும் நேரம் பூச்சிகளைத் தடுக்கிறது 

வானிலை எதிர்ப்பு
காற்றும் மழையும் இனி தடையாக இருப்பதில்லை என்பதால் வானிலை எதிர்ப்பு.

குறைந்த கெட்டுப்போகும்
மழை, பாக்டீரியா, வைரஸ், பூஞ்சை போன்றவற்றால் மாசுபடாததால்.

உயர் தயாரிப்பு தரம்
ஏனெனில் இரட்டை மெருகூட்டல் கண்ணாடி புற ஊதா (UV) ஒளியை வடிகட்ட முடியும், இது வைட்டமின் மற்றும் முக்கியமான ஊட்டச்சத்து மதிப்புகளை இழக்கச் செய்யும்.

வெப்ப காப்பு
இரட்டை பாலிகார்பனேட் வெப்ப இழப்பைக் குறைக்கும்.
குறைந்த உழைப்பு தீவிரம்
மழையின் போது சோலார் ட்ரையரை நகர்த்த தேவையில்லை

விற்பனை விலையை அதிகரிக்கவும்
அசல் நிறம், சுவை மற்றும் ஊட்டச்சத்து மதிப்பை பராமரிக்கிறது

 வருமானத்தை மேம்படுத்தவும்
விவசாயிகள் அல்லது சிறு-நடுத்தர தொழில்முனைவோர், உயர்தர சந்தைப்படுத்தக்கூடிய பொருட்களை உற்பத்தி செய்வதற்கான வாய்ப்பு காரணமாக.

Model:RSFPD10, RSFP D20, RSFP D30, RSFP D50,100,200,300,400,500,1000.
Available Capacity: 10kg, 20kg, 30kg, 50kg, 100kg,200kg,300kg,400kg,500kg,1000kg (வாடிக்கையாளரின் தேவைக்கேற்ப வடிவமைக்கப்படும்)


அம்சங்கள்:

  • நிறுவலுக்கு நிபுணர் தேவையில்லை.
  • லைட் வெயிட் மற்றும் போர்ட்டபிள். மடிக்கக்கூடிய மற்றும் மட்டு அமைப்பு.
  • துரு, தூசி, அழுக்கு, மழைப்பொழிவு, பூச்சிகள் மற்றும் தீங்கு விளைவிக்கும் புற ஊதா கதிர்வீச்சிலிருந்து பாதுகாப்பு.
  • துருப்பிடிக்காத ஸ்டீல் 304, GI மெட்டீரியல், பாலிகார்பனேட் மற்றும் அலுமினியம் பயன்படுத்தப்பட்டது.

 

ABOUT PRODUCT:

IT Core Solutions Mini hybrid Solar Dryer In today’s time when food and agricultural products are highly wasted, it is very necessary to process and preserve them for a long period of time. In particular, preservation by refrigeration and preservation by sun processing. Can be used in our  Farm, home use exclusive solar dryer. A perfect do it yourself project to preserve your favorite garden fruits and vegetable for all year use.





Domestic Purpose Solar Dryer.
Model: RSFP D20.
Average Capacity: 20kg.

FEATURES:

  • Do It Yourself model (DIY) : No expert required for installation.
  • Light Weight and Portable.
  • Foldable and Modular structure.
  • Protection from Rust, Dust, Dirt, Rainfall, Insects and Harmful UV radiation.
  • GI Material used.

    SPECIFICATIONS:
  • Size: Breath 2 x Length 4 * 1.5 height sq ft.
  • Actual Size of solar dryer: Width: 26 inches Length: 43.5 inches.
  • Height: 3 inches ( Ground height ) + 45 inches ( Tunnel height ).
  • Maximum Temperature: 85 +- 10 Degree Celsius.
  • Actual size of tray : 4 x 2 sq ft * 3 trays totally 20 Sq ft.
  • Total Drying area: 20 sq ft.
  • Solar Panel Capacity: 10W 12V.
  • Air Flow: Forced Convection using 12V Fan.
  • Heater 250W AC 230V With Auto cut-off.
  • Climatic controller with Maximum and Minimum Temperature Cut-off.
  • Detachable Trays for easy cleaning.

MATERIALS:

  • Cover Material: UV stabilized polycarbonate 6mm sheet with Al supporting pipe.
  • Tray: GI mesh ( Food grade ) with MS frame.
  • Structure: GI ( zinc coated iron ), MS frame.

APPLICATION:

All types of fruits, vegetables, herbs, spices, flowers and non-veg.

+91-8122000031
IT Core Solutions, 2164C, Trichy Road, Singanallur, Cbe-641005.
https://www.indiamart.com/itcoresolutions/solar-dryer.html
https://www.itcoresolutions.in/index.php/mini-hybrid-solar-dryer/
www.itcoresolutions.in

GST Extra18%